ரயில் நிலையில்தில் தரித்து நின்ற ரயில் மீதேறி செல்பி எடுக்க முயன்ற இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இந்தியாவின் சென்னை,  தாம்பரம் ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் மகனே இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

குறித்த இளைஞர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றார்.  தாம்பரம் ரயில் நிலையத்தில் தரித்து நின்ற எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றார். ரயில் பெட்டி மீது ஏறியபோது உயர் அழுத்த மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து ரயில் பெட்டி மீது விழுந்தார். 

சம்பவ இடத்திற்கு  வந்த ரயில்வே ஊழியர்கள் படுகாயம் அடைந்த இளைஞனை மீட்டு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.