2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில்

29 Jan, 2026 | 01:39 PM
image

நாடளாவிய  ரீதியில்  அரசாங்க பாடசாலைகளில்  2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

நீர்கொழும்பு 

அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு  மாணவர்களை வரவேற்கும் முதல் நாள் நிகழ்வு நடைபெற்றது. 

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து  மத்திய கல்லூரியில் காலை 8.30 மணி அளவில் இந்த நிகழ்வு அதிபர் என். புவனேஸ்வர ராஜா தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நீர்கொழும்பு வலய  ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி காஞ்சனா சிவக்குமார்  கலந்து கொண்டார்.

நிகழ்வில் இந்த வருடம் இரண்டாம் தரம் கல்வி கற்கும் மாணவர்கள்  அதிதிகள் மற்றும் தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய மாணவர்களை வரவேற்றனர்.

தொடர்ந்து பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது. நிகழ்வில் தரம் இரண்டு மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.  தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பரிசல்களும் வழங்கப்பட்டன.

ஹட்டன் கல்வி வலையம்

மகிழ்ச்சி புன்னகை அன்புடன் எனும் தொனிப்பொருளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதை அடுத்து மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் மாணவர்களை தரம் 01க்கு உள்வாங்கும் நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது.

அந்தவகையில் ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல 01தமிழ் வித்தியாலயத்தில் இன்று மாணவர்களை தரம் 01 க்கு அனுமதிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது இன்றை நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலையத்தின் ஆசிரியர் ஆலோசர் ஏ.சிவவதனசுந்தரம் கலந்து கொண்டதோடு கெர்க்கஸ்வோல்ட் 319ஜீ கிராம உத்தியோகத்தர் எஸ்.ரமேஸ்கண்ணா. அருஜீன் ஜீவ வரியின் உரிமையாளர் அருஜீன் பாடசாலையின் பழைய மாணவர்கள். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக வருகை தந்த மாணவர்கள் பேரணியாக பாடசாலையின் நுழைவாயிலுக்கு அழைத்து வரப்பட்டதோடு தரம் 02மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றனர்.

 அதன் பிறகு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு அதிதிகளுக்கு நினைவு பரீசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிராம உத்தியோகத்தர் எஸ்க்ஷரமேஸ்கண்ணா மற்றும் பாடசாலையின் பழைய மாணவரும் ஊடகவியலாளருமான எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் இனைந்து கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44