முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தையடுத்து நுவரெலியா - அட்டன் மார்க்கமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக  தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் சென்கிளோயர் பகுதியில்  இன்று மதியம் 12 மணியளவில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

டிக்கோயாவிலிருந்து  தலவாக்கலை நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டியானது சென்கிளோயர் பகுதியில் சென்றுகொண்டிருக்கையில் பாதையோரமிருந்த ஆல  மரமொன்றின் பாரிய கிளையொன்று முறிந்து முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்துள்ளது.

இதனால் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில்  வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு கொட்டகலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.

மரணனமானவர்  யாரென இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.