பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக ஜனாதிபதி இனவாத்தைப் பரப்ப முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

Published By: Vishnu

29 Jan, 2026 | 04:54 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தமது அரசாங்கம் உருவாக்கியுள்ள பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இனவாத்தைப் பரப்ப முயற்சிக்கின்றார். தலதா மாளிக்கை மீது குண்டு தாக்குதல் நடத்தியவர்கள், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எதிர்த்து அப்பாவி மக்களை கொன்றவரின் ஆட்சியில் இவற்றை எதிர்பார்க்க முடியுமே தவிர, சிறந்த எதிர்காலத்தை அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கணக்காய்வாளர் திணைக்களத்தில் அனுபவமும் அறிவும் கொண்டவர்களே இதற்கு முன்னர் கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது ஜனாதிபதியின் நண்பர்களை இந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இதன் காரணமாகவே அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது.

நிலக்கரி விலைமுறி, கொள்கலன் விடுவிப்பு உள்ளிட்ட ஊழல், மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் தனக்கு தேவையான ஒருவரை கணக்காய்வாளராக நியமிக்க முயற்சிக்கிறது. எனினும் மகா சங்கத்தினர் கணக்காய்வாளர் திணைக்களத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரியொருவரை அந்த பதவியில் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றனர். அதற்கான உரிமை அவர்களுக்கிருக்கிறது.

அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பிரச்சினைக்குரியவையாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் தற்போது கல்வி சீர்திருத்தங்களும் இழுபறியிலுள்ளன. எனவே இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைத்து ஆராயுமாறு எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் இந்த அரசாங்கத்திடமிருந்து பதில் எதுவும் இல்லை. குறைந்தபட்சம் கல்வித்துறை சார்ந்த நிபுணர்களுடன் கூட இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இறுதியில் அதனை ஒத்தி வைக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தம்மால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக இனவாதத்தைத் தூண்டுவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். இந்நாட்டில் எமது கட்சி மாத்திரமே சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகவுள்ளது. தலதா மாளிக்கை மீது குண்டு தாக்குதல் நடத்தியவர்கள், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எதிர்த்து அப்பாவி மக்களை கொன்றவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர். அவர்களது ஆட்சியில் இதனைத் தான் எதிர்பார்க்க முடியும். மாறாக சிறந்த எதிர்காலமொன்றை எதிர்பார்க்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-03-07 05:57:05
news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57