மாத்தளையில் விவேகானந்தன் ஹரிநாராயணியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

28 Jan, 2026 | 05:01 PM
image

மாத்தளையைச் சேர்ந்த செல்வி விவேகானந்தன் ஹரிநாராயணியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணிக்கு மாத்தளை வீர கெப்பெட்டிபொல அரங்கில் (மாவட்ட செயலக வளாகம்) நடைபெறவுள்ளது.

விவேகானந்தன் மற்றும் ஸ்ரீவித்யா தம்பதியினரின் புதல்வியான ஹரிநாராயணி, 'கலாவிபூஷன்', 'நட்டுவாங்க கலைமணி' திருமதி வேலாயுதன் சுதர்ஷினி (இயக்குநர் மற்றும் நிறுவனர், ஸ்ரீ பரதக்ஷேத்ரா பரதநாட்டிய பள்ளி) அவர்களின் சீடராவார்.

பிரதம விருந்தினராக  பி. குமார ரட்ணம் (நீதிபதி, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம்) மற்றும் கௌரவ விருந்தினர்களாக கலாசூரி ஆச்சார்ய கலா சாகர திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன் (நிறுவனர்-இயக்குநர், நாட்டிய கலா மந்திர்) கேப்டன் கோலித ஜெகத் காஹந்த (இலங்கை டிஸ்டிலரீஸ் நிறுவன முகமைத்துவப் பணிப்பாளர்), அருட்சகோதரி ஜயமணி ரொட்ரிகோ (அதிபர், புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை) ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி உஷாந்தி துரைசிங்கம் (தலைவர், நடன நாடகத் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்), கலாநிதி வி. பி. மன்சியா (நிறுவனர்-இயக்குநர், ஆக்னேயா நடனப் பள்ளி, கேரளா, இந்தியா) ஆகியோரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

மாத்தளை மண்ணின் கலைப்பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமையவுள்ள இந்த அரங்கேற்ற நிகழ்வில் கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28