மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனும் மூளை தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை

28 Jan, 2026 | 02:17 PM
image

எம்மில் பலருக்கு திடீரென்று கடுமையான தலைவலி ஏற்படக்கூடும். அதற்கான முதலுதவி அல்லது நிவாரண சிகிச்சையை பெற்றுக் கொள்வது வழக்கம். ஆனால் தலைவலியுடன் கழுத்து வலி அல்லது கழுத்தை இயல்பாக இயக்க முடியாத அளவிற்கு விரைப்பு தன்மை ஏற்பட்டால்... உடனடியாக வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். ஏனெனில் அவை மருத்துவ மொழியில் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என குறிப்பிடப்படும் மூளை தொற்று பாதிப்பாக இருக்கலாம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

மூளைத் தொற்று அல்லது மூளைக்காய்ச்சல் என்பது ஒரே தருணத்தில் ஏற்படும் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையாகும். இத்தகைய பாதிப்பு உங்களுடைய மூளை மற்றும் முதுகுதண்டுவடத்தை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் தொற்று பாதிப்பு அல்லது வீக்கமாகும்.  வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை காளான் மற்றும் அமீபிக் ஆகிய கிருமிகளால் இத்தகைய மூளைக்காய்ச்சல் மற்றும் மூளைத் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ளூர் மக்களால் அதிக அளவில் பாவிக்கப்படாத ஏரிகள், ஆறுகள், குளங்கள், வெந்நீர் ஊற்றுகள், ஆழமற்ற நன்னீர் குட்டைகள் ஆகியவற்றில் அமீபா எனும் உயிரினம் வாழ்கிறது. இத்தகைய நீர் நிலைகளில் நீராடும் போது, அமீபா கிருமிகள் எம்முடைய உடலில் புகுந்து மூளையை பாதிக்கிறது.‌

தலைவலி, கழுத்து வலி, காய்ச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி, தசை பலவீனம், ஒளி உணர்திறன் பாதிப்பு , நடத்தையில் மாற்றங்கள், மாயத் தோற்றங்கள், ஒலி குறிப்புகள், வலிப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால்... உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும் ,சிகிச்சையும் பெற வேண்டும். பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறார்களாக இருந்தால் நெற்றி வீக்கம், உணவு எடுத்துக் கொள்வதில் பாரிய அசௌகரியம், தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம் ஆகியவை மூளைக்காய்ச்சல் அல்லது மூளை தொற்று பாதிப்பின் அறிகுறியாக பாவித்து, உடனடியாக வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது இருக்கும்.

பொதுவாக ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கும், எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு திறன் இயல்பான அளவைவிட குறைவாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என்பதால் அவர்களுக்கு இத்தகைய தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதையும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு சிறுநீர், குருதி, உமிழ் நீர் ஆகிய பரிசோதனைகளையும், எலக்ட்ரோஎன்சொபாலோகிராம், சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர். சிலருக்கு ஒருங்கிணைந்த சிகிச்சைகளை வழங்கியும் நிவாரணம் தருவர்.‌

வைத்தியர் வின்சென்ட் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒவ்வாமை பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-09-15 14:44:25
news-image

மைக்சுரிஷன் சின்கோப் எனும் திடீரென்று ஏற்படும்...

2026-09-14 15:28:54
news-image

ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பிற்குயிய நவீன...

2026-09-12 15:08:19
news-image

அயோர்ட்டாபைஃபெமரல் எனும் கால் ரத்த நாள...

2026-09-11 17:01:49
news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39