2026 ஆம் ஆண்டுக்கான 'MDRT ஸ்ரீலங்கா டே' கொழும்பில் அங்குரார்ப்பணம்!

Published By: Digital Desk 3

03 Feb, 2026 | 05:30 PM
image

(சரண்யா பிரதாப்)

காப்புறுதி மற்றும் நிதிச் சேவைத்துறையில் உலகத்தரம் வாய்ந்த நிபுணர்களின் கூட்டமைப்பான மில்லியன் டொலர் ரவுண்ட் டேபிளின் (Million Dollar Round Table - MDRT) இலங்கைக்கான உறுப்பினர் தொடர்புக் குழுவினால் (Membership Communication Committee Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான MDRT ஸ்ரீலங்கா டே (MDRT Sri Lanka Day 2026) நிகழ்வு  உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலின் 8 டிகிரிஸ் ஒன் த லேக்கில்  (8 Degrees on the Lake) திங்கட்கிழமை (ஜன 26) நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) பணிப்பாளர் நாயகம், முன்னணி காப்புறுதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (CEOs) மற்றும் துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையிலுள்ள காப்புறுதி ஆலோசகர்களின் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துதல் மற்றும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரதான மாநாட்டிற்கான உத்தேசத் திட்டங்களை வெளியிடுதல் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

MDRT ஸ்ரீலங்கா டே 2026 மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஒரு முக்கிய அங்கமாக, இந்த மாபெரும் முயற்சிக்கு வலுசேர்க்கும் அனுசரணையாளர்கள் மற்றும் உத்தியோகபூர்வ பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பிரதான அனுசரணையாளர் மற்றும் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளர் பிரைம் குரூப், உத்தியோகபூர்வ வங்கி பங்காளர் மக்கள் வங்கி,  சுகாதார சேவை பங்காளர் ஆசிரி ஹெல்த் தனியார் வைத்தியசாலை,  உத்தியோகபூர்வ பயிற்சி நெறி பங்காளர் சுரஞ்சித் டு டே,  உத்தியோகபூர்வ விருந்தோம்பல் பங்காளர் ஜெட்விங் ஹோட்டல்,  உத்தியோகபூர்வ சிங்கள மற்றும் ஆங்கில அச்சு மற்றும் இணைய ஊடகப் பங்காளர் திவயீன மற்றும் சண்டே ஐலேண்ட், வெளிப்புற டிஜிட்டல் மீடியா பங்காளர் இமேஜிங் மீடியா மற்றும் பிளாட்டினம் பங்காளர் மல்டி லக் மெக்டைல்ஸ் ஆகியன கௌரவிக்கப்பட்டன.

அத்துடன்,  பிரத்தியேக தமிழ் அச்சு மற்றும் இணைய ஊடக அனுசரணையாளராக (Exclusive Tamil Print and Online Media Partner) வீரகேசரி கைகோர்த்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரம் மற்றும் கௌரவிப்பு இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டது.

MDRT அங்கத்துவம் என்பது காப்புறுதி ஆலோசகர் ஒருவர் தனது பணியில் கொண்டுள்ள நேர்மை, சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்முறை நிபுணத்துவம் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சர்வதேச சான்றிதழாகும். 

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரதான நிகழ்வானது, காப்புறுதித் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MDRT இன் இலங்கை கிளையின் தலைவர் லஹிரு மதுரங்க உரையாற்றுகையில்,

MDRT என்பது வெறும் விற்பனை இலக்குகளை எட்டுவது மட்டுமல்ல அது காப்புறுதித் துறையின் நேர்மை (Ethics), சிறந்த சேவை (Service) மற்றும் தொழில்முறை நிபுணத்துவம் (Professionalism) ஆகியவற்றின் அடையாளமாகும். இது காப்புறுதித் துறையின் 'நிதி ஒலிம்பிக்' (Financial Olympics) என்று அழைக்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் 1,200 MDRT சாதனையாளர்கள் உருவாகினர். இருப்பினும், டொலர் மாற்று விகிதப் பிரச்சினைகள் மற்றும் விசா சிக்கல்கள் காரணமாக அவர்களில் 50-க்கும் குறைவானவர்களே அமெரிக்காவில் நடைபெறும் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடிந்தது.

எமது நாட்டு நிபுணர்கள் சர்வதேச மட்டத்திலான இந்த அனுபவத்தைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள சாதனையாளர்களுக்காக "MDRT மாநாட்டை இலங்கைக்கே கொண்டு வருவது" என்ற பாரிய இலக்கை எமது குழு ஏற்றது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்  இன்று அது நனவாகியுள்ளது.

இலங்கை காப்புறுதித் துறை சர்வதேச அரங்கில் தலைநிமிர வேண்டும் என்று நம்பிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் சாதனையாளர்களுக்கும் உரியது எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16
news-image

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா!

2026-06-30 16:19:16