கோலாகலமாக அரங்கேறும் கலாமித்ரா விருது விழா

28 Jan, 2026 | 01:11 PM
image

45 ஆண்டுகளைக் கடந்து 46ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் 1995ஆம் ஆண்டினில் ஆரம்பித்த விருது வழங்கும் விழாவை  இம்முறை 20ஆவது ஆண்டின்  நிகழ்வாக  நடத்துகின்றது.

கலை, இலக்கியத் துறைகளில் இளையவர்களின் ஆர்வங்களை மேம்படுத்தவும் அவர்களது திறமை வெளிபாட்டுக்கு போட்டிகளை நடத்தி ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு  முக்கியத்துவம் வழங்குகின்றது.

அந்த வகையில் இம்முறை  சிறுகதை, கட்டுரை,கவிதை,சித்திரம்,மருதாணி அலங்காரம்,பாடல், மற்றும் நடனப்போட்டிகளை நடத்தி 25 வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப் படவுள்ளன.

அத்துடன் சினிமா, நாடகம், இசை,இலத்திரனியல்ஊடகத்துறை, அச்சு ஊடகத்துறை, நடனம்,படைப்பாக்கம்,அழகுகலை,சமூக சேவை மற்றும்  சமூகசேவை அமைப்பு  போன்ற  பத்து துறைகளை  சேர்ந்த   முக்கியஸ்தர்களுக்கு கலாமித்ரா  விருது  வழங்கி  கெளரவிக்கப்படவுள்ளது.

இம்முறை  விசேட ஏற்பாடாக மலையகத்தை சேர்ந்த  சமூக சேவையாளர்கள் கலைஞர் பத்து பேருக்கும் சமகாலத்தில் தொடர்ச்சியாக கலை மற்றும் சமூகப்பணியாற்றி வரும் மேலும் ஜவருக்கு என15 பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மொத்தமாக 50 பேருக்கு விருது  வழங்கும்  இவ்விழா வரும் 30ஆம் திகதி மாலை 5.30.மணிக்கு கொழும்பு-11,செட்டியார்  தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. 

மேற்படி  அமைப்பின் நிறுவனர்  கலைஞர்-ஊடகவியலாளர் ராமேத்தா தலைமையில் நடைபெறும்  இந்  நிகழ்வினின் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் ஹாசிம் உமரும் கெளரவ விருந்தினர்களாக  தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழில்  அதிபர் டாக்டர் பி ஆறுமுகபாண்டியன் மற்றும்  தமிழக சூரியா வைத்தியசாலையின்  பிராந்திய இயக்குநர் பி கே. சரவணனும்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து  கொள்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29