இலங்கையின் சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு மாறும் அபாயம்

28 Jan, 2026 | 12:12 PM
image

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றுத் தரம் பெரும்பாலும் மிதமான நிலைகளில் காணப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் அது மேலும் பாதிக்கப்படக்கூடும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (27)  வெளியிடப்பட்ட சுற்றுப்புற காற்றுத் தர அறிக்கையில், பெரும்பாலான நகர்ப்புறங்களில் PM2.5 எனப்படும் நுண்ணிய தூசி துகள்களின் அளவு மிதமான நிலையில் இருந்ததாக NBRO குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றுத் தரம் நல்ல நிலையாக பதிவாகியுள்ளது.

எனினும், அடுத்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல நகரங்களில் காற்றுத் தரம் மிதமானது முதல் சற்றே ஆரோக்கியமற்ற நிலை வரை மாறக்கூடும் என NBRO எச்சரித்துள்ளது.

மேலும், வடக்கு பிரதேசத்திலிருந்து எல்லைத் தாண்டி வீசக்கூடிய மாசடைந்த காற்றோட்டம் காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் காற்றுத் தரம்  ஆரோக்கியமற்ற நிலையை எட்டக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பொதுமக்கள் இயன்றவரை முகக்கவசம் அணியுமாறும், மூச்சுத் திணறல் போன்ற சுவாச சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விநியோகச் சிக்கல்கள்  - அமைச்சரவை...

2026-03-17 15:04:48
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

கிளிநொச்சி கடற்பரப்பில் 78 கிலோ போதைப்பொருள்...

2026-03-17 14:48:13
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15