எல்பிட்டிய, குருந்துகஸ்ஹெத்தக்ம உப தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த தபால் நிலைய அதிபர் உயிரிழந்துள்ளார். 

குறித்த தீப்பரவல் சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தின் போது அலுவலகத்திற்குள் இருந்த 49 வயதுடைய நிலைய பெண் அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.