புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Published By: Digital Desk 3

27 Jan, 2026 | 01:26 PM
image

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

ஞாாயிற்றுக்கிழமை (25) இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமை உள்ள விடியல் விளையாட்டு மைதானத்தில் உள்ள கிணற்று கட்டில் குறித்த இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதுடன், கிணற்றுக்குள் குறித்த இளைஞருடையதாக கருதப்படும் காலணி ஒன்று காணப்பட்டது.

அதனையடுத்து குறித்த கிணற்று நீரினை வெளியேற்றி தேடுதல் மேற்கொண்டபோது குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 15:42:44
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தை சிறப்பாக...

2026-05-21 14:22:50