கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி தென் கொரியா செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 25 சதவீதமாக அதிகரித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை தென் கொரிய பாராளுமன்றம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த வரி அதிகரிப்பு வாகனங்கள் (Automobiles), மரம் (Lumber), மருந்துகள் (Pharmaceuticals) மற்றும் ஏனைய பரஸ்பர வரி விதிக்கப்படும் பொருட்கள் மீது அமுல்படுத்தப்படும்.
முன்னதாக 25 சதவீதமாக இருந்த வரியை 15 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதனை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த வரி உயர்வு குறித்து தமக்கு முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது கனடாவில் இருக்கும் தென் கொரிய தொழில் துறை அமைச்சர் கிம் ஜங்-குவான் (Kim Jung-kwan), உடனடியாக அமெரிக்கா சென்று வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்-ஐ (Howard Lutnick) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த அறிவிப்பால் ஹூண்டாய் (Hyundai), கியா (Kia) போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்த போதிலும், பின்னர் மீட்சியடைந்தன.
2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொரியாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது, அமெரிக்காவில் கப்பல் கட்டும் தொழில் (Shipbuilding) உள்ளிட்ட முக்கிய துறைகளில் 350 பில்லியன் டொலர் முதலீடு செய்ய தென் கொரியா ஒப்புக்கொண்டது. இதற்குப் பதிலாக அமெரிக்கா தனது வரியைக் குறைக்க இணங்கியிருந்தது. ஆனால், தென் கொரிய பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் இன்னும் நிலுவையில் உள்ளதே ட்ம்பின் இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகும்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM