கோண்டாவில் மறுமலர்ச்சி விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட தாச்சி சங்கத்தின்ஆதரவுடன் நடத்திய தாச்சி சுற்றுப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற இறுதிப் போட்டியில் தாவடிகாளியம்பாள் விளையாட்டுக் கழகமும் உடுவில் ஆலடி சிந்து விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
போட்டி தொடங்கிய நேரம் முதல் இரு அணிகளும் கடும் போட்டியாக விளையாடி போதிலும் முதற்பாதி ஆட்டத்தில் தாவடிகாளியம்பாள் விளையாட்டுக் கழகம் 02 க்கு 01 என்ற பழங்கள் கணக்கில் முன்னிலை பெற்றுக் காணப்பட்டது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளின் ஆதரவாளர்களின் ஆரவாரத்தின் மத்தியில் இரு அணிகளும் களம் இறங்கிய போதிலும் மீண்டும் தாவடிகாளியம்பாள் விளையாட்டுக் கழகம் மிகவும் அவதானத்துடன் விளையாடி மேலும் இரண்டு பழங்களை பெற்ற நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகம் 04 க்கு 01 என்ற பழங்கள் கணக்கில் ஆலடி சிந்து விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
போட்டிகளின் சிறந்த வீரர்களாக காளியம்பாள் விளையாட்டக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.சயந்தனும் சிந்து விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த கே.பிரபாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM