மஸ்கெலியா - ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில்  துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய   இத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.  

இத்  துப்பாக்கியானது  வேட்டையாடுவதற்கு பயன்படுத்துவது என்றும்    இலங்கையில் தயாரிக்கப்பட்ட காட்டுத்துப்பாக்கி  என்றும்  மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.  

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .