(இராஜதுரை ஹஷான்)
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்காமல் எவ்வித விளக்கமும் கேட்காமல் ஒரே தடவையில் பதவி நீக்கி சபாநாயகர் இயற்கை சட்டத்தின் கோட்பாடுகளை மீறியுள்ளார் என்று முன்னாள் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, சர்வதேச அமைப்புக்களில் முறைப்பாடளிக்கவுள்ளார்.
அதேபோல் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக தான் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இலங்கை பாராளுமன்றத்தில் பிரதி செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன 2023.09.15 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். நியமனம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டு சமிந்த குலரத்ன கடந்த 23 ஆம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையில் இருந்து நீக்கப்பட்டார்.
அரசசேவையில் சுமார் 20 ஆண்டுகால அனுவத்தை கொண்டுள்ள சமிந்த குலரத்ன, தான் பதவி நீக்கப்பட்டதற்கு எதிராக பொதுநலவாய அமைப்பு, பாராளுமன்ற செயலாளர் நாயக சர்வதேச ஒன்றியம், அனைத்து பாராளுமன்ற ஒன்றியம், ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கவுள்ளார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்காமல் தன்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் ஒரே தடவையில் பதவி நீக்கி சபாநாயகர் இயற்கை சட்டத்தின் கோட்பாடுகளை மீறியுள்ளார் என்று சர்வதேச அமைப்புக்களில் முன்வைக்கவுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக தான் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
சபாநாயகர் தலைமையில் கடந்த 23 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக்குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சபாநாயகர்இ சபைமுதல்வர்இ எதிர்க்கட்சித் தலைவர்இ நிதி அமைச்சரின் பிரதிநிதிஇ பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் இந்த ஆலோசனைக்குழுவின் உத்தியோகபூர்வ உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) கூடிய குழுக்கூட்டத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ,சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , எதிர்க்கட்சித் தலைவரை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக, நிதி அமைச்சரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி நிதியமைச்சரான அனில் பெர்னாண்டோ, மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகமான சமிந்த குலரத்னவை குழுவுக்கு அழைத்து அவரிடம் விளக்க காரணிகள் கோராதது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சரின் பிரதிநிதியான அனில் பெர்னாண்டோவும், எதிர்கட்சித் தலைவரின் பிரதிநிதியான கயந்த கருணாதிலக இதன்போது தெரிவித்திருந்தனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM