அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற வேண்டியோர் மீது இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

26 Jan, 2026 | 04:31 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்வி சீர்திருத்தங்களில் தவறு இடம்பெற்றுள்ளது என்பதை அரசாங்கம் மாத்திரமின்றி ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த தவறால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய நஷ்டத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

திங்கட்கிழமை (26) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்வி சீர்திருத்தங்களில் தவறு இடம்பெற்றுள்ளது என்பதை அரசாங்கம் மாத்திரமின்றி ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே தான் அதனை தற்போது ஒத்தி வைப்பதாகவும், அது குறித்து மீள மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார். எவ்வாறிருப்பினும் சில அமைச்சர்களின் தன்னிச்சையான கருத்துக்களால் இது முற்று பெறாத ஒரு கருப்பொருளாகியுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாட நூல்களை அச்சிடுவதற்கு செலவிட்ட பணம் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2023ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அதற்கான முழுமையான அதிகாரம் காணப்படுகிறது.

முதலில் தவறிழைக்கப்பட்டதால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பில் பொலிஸ் மற்றும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.

அதற்கு சட்ட ஒத்துழைப்பு தேவையெனில் சட்டமா அதிபரை நாட முடியும். இந்த விவகாரத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய துறைகள் சுயாதீனமாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவற்றின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காகவே நாம் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.

ஆனால் நாட்டின் மூன்றாவது பிரஜையாக இருந்த ரன்வலவுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படாத சட்டம், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுத்தப்படும் என்று எவ்வாறு நம்புவது? ஜனாதிபதியின் அறிவிப்பிற்கமைய புதிய முறைமை ஒத்தி வைக்கப்பட்டால், பழைய முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39