கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்.!

Published By: Robert

28 Aug, 2017 | 12:59 PM
image

‘வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான பூகோள போக்கு’ என்ற கருப்பொருளில் இடம்பெறும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. 

இலங்கை இராணுவத்தினால் பூகோள பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான உரையாடலை ஏற்படுத்துவதற்காக 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு மாநாடு, உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இம்முறையும் நடைபெறுகிறது. 

ஆகஸ்ட் மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்கள், பகுப்பாய்வாளர்கள், ஆலோசகர்கள், பாதுகாப்புத்துறை முன்னோடிகள் என சுமார் 800 பேர்கள் பங்குபற்றுகின்றனர். 9 அமர்வுகளாக நடைபெறும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான பூகோள போக்கு என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. மேலும் அரசாட்சி மற்றும் அரச பாதுகாப்புக்கெதிராக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சர்வதேச தொடர்புகளுடன் துரிதமாக பரவிவரும் தீவிரவாத வன்முறை மற்றும் நவீன பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது. 

7வது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகள், இராணுவப் பிரதிநிதிகள் மற்றும் 35 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19
news-image

இசை நிகழ்ச்சியில் வன்முறை ; 6...

2025-03-16 17:13:20
news-image

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்பு ; ரயில்...

2025-03-16 16:37:30
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு ; கொழும்பு...

2025-03-16 17:40:18
news-image

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர்...

2025-03-16 17:04:07
news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

எரிபொருள் குழாயில் சேதம்

2025-03-16 17:24:44
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39