விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள் கடத்தல் ; மூன்று பேர் கைது!

25 Jan, 2026 | 04:57 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக  'குஷ்'  மற்றும் 'ஹஷிஷ்'  போதைப்பொருள் தொகுதியினை கடத்தி வர முயன்ற மூன்று பயணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய வருகை முனையத்தின்  ஊடாக வெளியேற முயன்ற போதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கட்டிடத் தொழிலாளி மற்றும் தொழிலதிபர், மேலும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய தொழிலதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று  அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து 'ஸலாம் எயார்'  நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 ரக விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.

அவர்கள் கொண்டு வந்த 05 பயணப் பொதிகளைப் பரிசோதித்த போது, சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 10 பொதிகளில் அடைக்கப்பட்ட   10 கிலோகிராம் 394 கிராம் 'குஷ்' போதைப்பொருளும், 18 பொதிகளில் அடைக்கப்பட்ட 01 கிலோகிராம் 912 கிராம் 'ஹஷிஷ்' போதைப்பொருளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களும் போதைப்பொருள் தொகுதியும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32