அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு பதவிகள் பெரிதாக இருக்கலாம் அந்த பதவி எனக்கு பெரிதல்ல - அனுஷா சந்திரசேகரன்

25 Jan, 2026 | 04:56 PM
image

நாட்டில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் என்பது வரவேற்க கூடிய விடயம் கல்வி சீர்திருத்தம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான விடயமாகும் ஆனால் புதிய கல்வி சீர்திருத்தத்தை உள்வாங்கும் அளவில் எங்களுடைய பாடசாலைகளில் அதற்கான தரம் காணப்படுகிறதா என புரட்சி கர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (25) ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடாகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன்,

மலையகத்தில் இயங்குகின்ற சில பாடசாலைகளில் கனனி வசதிகள் கூட காணப்படுவது குறைவாகவே காணப்படுகிறது போக்குவரத்து வசதிகள் இல்லாத பாடசாலைகளும் காணப்படுகிறது இங்குள்ள பாடசாலையில் விஞ்ஞான துறை குறைவாகவே காணப்படுகிறது.

இது போன்ற விடயங்களில் நாம் பின் தங்கி இருக்கின்றது இதேவேளை இவற்றை அனைத்தும் தரம் உயர்த்தப்பட வேண்டும் ஆறு இலட்சத்திற்கு மேல் நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் வாழுகின்ற இந்த மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழகம் கூட கிடையாது.

இந்த அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்த பின் புதியதொரு கல்வி சீர்திருத்தம் கொண்டுவருவது வரவேற்க்க கூடியதாக இருக்கும்.

எமது கட்சி இதுவரை காலம் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இயங்கி வந்தது இனிவரும் காலங்களில் நாடலாவிய ரீதியில் இயங்கும் தலவாக்கலை மண்ணில் இரண்டாவது தடவையாக இந்த புரட்சி கர மக்கள் சக்தி உருவாகியிருக்கிறது.

முதலாவதாக உருவாக்கப்பட்ட கட்சி எனது தந்தை உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியாகும் எனது தந்தை இருந்த காலப்பகுதியில் மக்களுக்கு எவ்வளவு சேவைகளை முன்னெடுத்ததோ அதேபோல் இந்த புரட்சி கர மக்கள் சக்தியும் மக்களுக்கான சேவையினை முன்னெடுக்கும் எமது கட்சியில் ஏற்றதாழ்வு கிடையாது சகலருக்கும் சம உரிமை வழங்கப்படும் .

மலையக மக்கள் முன்னியினால் அதிகாரமற்ற பதவி எனக்கு வழங்கப்பட்டது பிரதி செயலாளர் நாயகம் என்ற பதவி எனது தேர்தலுக்கு பின்னர் மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் இந்த பிரதி செயலாளர் நாயகம் பதவியில் இருந்தும் என்னை நீக்கினார்கள் கட்சியில் பதவி வெறிபிடித்து அலையும் நபர்கள் ஏரலாகமாக இருக்கிறார்கள் ஏமாற்று காரார்கள் இருக்கிறார்கள்.

ஊழல்வாதிகள் இருக்கிறார்கள் இவர்களுக்கு வேண்டுமானால் இந்த அதிகாரமற்ற பிரதி செயலாளர் நாயகம் பதவி பெரிதாக இருக்கலாம் 

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடும் எழும்பு துண்டுகளுக்கு இந்த பதவி பெரிதாக இருக்கலாம் 1994ம் ஆண்டு அரசியலை புரட்டி போட்ட உலகரிந்த தலைவர் அமரர் சந்திரசேகரனின் அரசியலை சிறுவயதில் இருந்தே பார்த்து வளர்ந்திருக்கின்றேன்.

அவருடைய உறையை நான் கேட்டிருக்கிறேன் அவருடைய கொள்கைகளை நான் உள்வாங்கி இருக்கின்றேன் எனது நாடி நாலம் உடல் முழுவதும் எனது தந்தை சந்திரசேகரின் இரத்தம் ஓடுகிறது ஆகவே எனக்கு கட்சியின் பதவிகள் ஒன்றும் பெரிதல்ல.

மாகாணசபை தேர்தல் எப்போது இடம்பெறும் என்பதை அறிவிக்கப்பட வேண்டும் எந்த முறையில் வரும் என்பதை தெளிவுபடுத்த பட வேண்டும் பழைய முறைமை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் வரும் பொழுது எங்களுடைய தீர்மாணத்தை நாங்கள் அறிவிப்போம் எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கட்சிகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல இதற்கு முன்னர் இருந்த அரசியல் தலைமைகள் எதுவும் செய்யவில்லை என கூறி புதிய ஒரு அரசாங்கத்தை மக்கள் கொண்டுவந்தனர்.

இந்த புதிய அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம் நிலையான வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32