சட்டவிரோத மரங்களை ஏற்றிவந்த லொறி விபத்தில் சிக்கியது.!

Published By: Robert

28 Aug, 2017 | 11:25 AM
image

சட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் இன்று அதிகாலை விழுந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

செங்கலடி மணலாறு பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கிரான் பகுதியினூடாக ஓட்டமாவடிக்கு கொண்டு வரும் வழியில் புலியாந்தகல் பகுதியில் வைத்து வாழைச்சேனை வனஇலகா அதிகாரிகள் கைது செய்வதற்காக துரத்தியுள்ளனர். அதன்போது அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேகமாக வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் விழுந்துள்ளது. 

10 அடி தொடக்கம் 12 அடி நீளம் கொண்ட முப்பதுக்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இப்பகுதியில் சட்டவிரோத மரம் வெட்டும் பணி இடம்பெறுவதால் வனஇலகா அதிகாரிகள் இப்பகுதியில் கடமையில் ஈடுபடுவதாகவும் வாழைச்சேனை வனஇலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22