தெகியத்தகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற சிறைச்சாலை வாகன விபத்து ஒன்றில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தெகியத்தகண்டிய  பிரதேசத்தில் குடாஓயா பாலம் அருகில் சிறைச்சாலை பஸ் வண்டி வீதியை விட்டு விலகியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கைதியொருவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் ஒப்படைத்து விட்டு திரும்பி வருகையிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பில் தெகியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.