கனடா மீது 100% வரி விதிக்கப்படும் : சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

Published By: Digital Desk 3

25 Jan, 2026 | 11:15 AM
image

கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து கனேடிய பொருட்கள் மீதும் 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "சீனா கனடாவை உயிரோடு விழுங்கிவிடும். அந்நாட்டின் வணிகங்கள், சமூகக் கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை சீனா முற்றிலுமாக அழித்துவிடும். கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும்," என பதிவிட்டுள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ட்ரம்பின் மிரட்டலுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், "வெளிநாடுகளில் இருந்து நமது பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது, நாம் நமது சொந்த நாட்டுப் பொருட்களையே வாங்க வேண்டும். ஏனைய நாடுகள் செய்வதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்கான சிறந்த வாடிக்கையாளராக நாமே இருக்க முடியும்," என காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக ஜனவரி மாதம் 16 ஆம் திகதி, கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்வதை ஆதரிப்பதாகக் கூறியிருந்த ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.

சீனாவுடன் 'சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்' (Free Trade Deal) எதையும் செய்யவில்லை எனவும், சில வரி தொடர்பான சிக்கல்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டதாகவும் கனடா அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா கிரீன்லாந்தை (Greenland) கையகப்படுத்த முயற்சிப்பதைக் கனடா பிரதமர் விமர்சித்ததைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே இந்த விரிசல் அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26
news-image

விஜய் தலைமையிலான தமிழக அரசின் வேளாண்மை...

2026-08-06 16:20:09
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில்...

2026-08-05 14:00:59
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக...

2026-08-05 13:07:22