8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

25 Jan, 2026 | 12:04 PM
image

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 'குஷ்' ரக போதைப்பொருடன் இலங்கையர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை  (25) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், அவர் இரவு நேர விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றுபவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று  அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து ஓ.வி-437 (OV-437) ரக ஸலாம் எயார் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரிடமிருந்த இரண்டு பயணப்  பைகளுக்குள் 08 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 08 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 8 கிலோகிராம் 220 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியையும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37