கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி மீது குற்றஞ்சுமத்துவது அடிப்படையற்றது - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

25 Jan, 2026 | 09:53 AM
image

(எம்.மனோசித்ரா)

கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை எந்த வகையிலும் எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தவில்லை. பாட உள்ளடக்கங்கள் தயாரிப்பிலும், அது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் எதிர்க்கட்சியின் எவ்வித பங்களிப்பும் இல்லா நிலையில், சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு நாமே காரணம் எனக் கூறுவது அடிப்படையற்றதாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்குமாறு கோருவதற்காக பெற்றோர்கள் குழுவொன்று  சனிக்கிழமை (24) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்திருந்தது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்வி சீர்திருத்தங்களை முதலில் நாமே முன்வைத்தோம். அந்த வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மீளப்பெறுமாறோ அல்லது நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றோ நாம் கூறவில்லை. கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தடையாகவுள்ளதாகக் கூறப்படுவது நம்பக் கூடிய விடயமல்ல.

நாட்டில் கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சியாக இருந்தாலும் சக்வல வேலைத்திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நவீன வகுப்பறை உபகரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தோம்.

எதிர்க்கட்சியால் கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த முடியுமா? அதிபர்கள், ஆசிரியர்கள் அல்லது மாணவர்களை வீதிக்கிறக்கு இவற்றை எதிர்க்குமாறு நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. இவர்களை வீதிக்கிறக்காமல் இந்த நடவடிக்கைகளை தடுக்க முடியாது. நாம் அவ்வாறு செய்யவுமில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது முகநூல் பதிவில் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதில் தரம் 6க்கான சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவரே தெரிவித்துள்ளார். எனவே சீர்திருத்தங்களை ஒத்தி வைத்தது நாம் அல்ல, ஜனாதிபதியே என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அவை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதனை முறையாக முன்னெடுத்திருந்தால் இன்று இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்பட்டிருக்காது.

தரம் 6 ஆங்கில பாட விடயதான தயாரிப்பு பணிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களோ எனது அதிகாரிகள் குழுவோ பங்கேற்கவில்லை. இது தயாரிக்கப்படும் போது 12 சந்தர்ப்பங்களில் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. அவ்வாறிருந்தும் பொறுத்தமற்ற ஒரு இணையதளத்தின் முகவரி எவ்வாறு பாட நூலில் உள்ளடக்கப்பட்டது? இதற்கும் எதிர்க்கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனும் போது எவ்வாறு சீர்திருத்தங்கள் எம்மால் தடைபட்டுள்ளதாகக் கூற முடியும்? எனவே இதனை பெற்றோர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32