(நெவில் அன்தனி)
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (24) இரவு மின்னொளியில் நடைபெற்ற தீர்மானம் மிக்க சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் பி குழுவில் முதலிடத்தில் உள்ள குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்துடனான போட்டியை 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட யாழ். நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதி பெற்றது.
சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு பெலிக்கன்ஸ் கழகத்துடனான போட்டியில் சென். மேரிஸ் கழகத்திற்கு வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்பட்டது.
போட்டியின் 71ஆவது நிமிடம் வரை ஒரு கோல் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த சென் மேரிஸ் கழகத்திற்கு 72ஆவது நிமிடத்தில் கிடைத்த சொந்த (own goal) கோல் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள உதவியது.
இதன் பலனாக சுப்பர் 8 சுற்றில் விளையாட சென் மேரிஸ் கழகம் தகுதிபெற்றது.
அந்த சந்தர்ப்பத்தில் பெலிக்கன்ஸ் கழக கோல் வாயிலில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி கோலை நோக்கி சென் மேரிஸ் கழக மாற்று வீரர் எம். பிரேம்குமார் உதைத்த பந்தை திசை திருப்ப பின்கள வீரர் லஹிரு சம்ப்பத் முயற்சித்தபோது பந்து தவறுதலாக அவரது கோலினுள்ளேயே சென்றது.
இதன் காரணமாக போட்டியின் 25ஆவது நிமிடத்தில் பெலிக்கன்ஸ் சார்பாக செல்வம் சுதர்சனின் பந்து பரிமாற்றத்துடன் டெனில் முசாட்கின் போட்ட கோல் வீண் போனது.
இப் போட்டி முடிவுடன் சுப்பர் சுற்றில் விளையாடவுள்ள 8 அணிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ஏ குழுவிலிருந்து சோண்டர்ஸ், செரெண்டிப், நியூ ஸ்டார், ஜாவா லேன் ஆகிய கழகங்களும் பி குழுவிலிருந்து பெலிக்கன்ஸ், சொலிட், பொலிஸ், சென். மேரிஸ் ஆகிய கழகங்களும் சுப்பர் 8 சுற்றில் விளையாடவுள்ளன.
சுப்பர் 8 சுற்று ஜனவரி 30ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இரண்டு குழுக்களிலும் கடைசி இடங்களைப் பெற்ற ஆறு அணிகள் தரமிறக்கல் சுற்றில் விளையாடும்.
தரமிறக்கல் சுற்றில் ஏ குழுவிலிருந்து நிகம்போ யூத், கிறிஸ்டல் பெலஸ், இ.போ.ச. ஆகிய கழகங்களும் பி குழுவிலிருந்து சுப்பர் சன், மொரகஸ்முல்லை, மாத்தறை சிட்டி ஆகிய கழகங்களும் விளையாடவுள்ளன.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM