(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (24) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 5 விககெட்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டுள்ளது.
ஜோ ரூட்டின் சகலதுறை ஆட்டம், அணித் தலைவர் ஹெரி ப்றூக்கின் பொறுமையான துடுப்பாட்டம், ஜொஸ் பட்லரின் அதிரடி ஆட்டம் என்பன இங்கிலாந்தை வெற்றி அடையச் செய்தன.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சரித் அசலன்க 45 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.
ஆனால், முன்வரிசையிலோ மத்திய வரிசையிலோ இலங்கை வீரர்களிடம் இருந்து போதிய பங்களிப்பு கிடைக்கவில்லை.
சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா ஆகியோரைவிட
பவன் ரத்நாயக்க 29 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் எட்டாவது பந்துவீச்சாளர் ஜோ ரூட் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ரஷித் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு இங்கிலாந்து நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது ரெஹான் அஹ்மத் (13) ஆட்டம் இழந்தார்.
ஆனால், பென் டக்கட், ஜோ ரூட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
பென் டக்கட் 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ஜேக்கப் பெத்தல் (6) களம் விட்டு வெளியேறினார்.
எனினும் ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பெற்ற ஜோ ரூட் 75 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஹெரி ப்றூக் 42 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து ஜொஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.
பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டசே 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஜோ ரூட்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM