ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து

24 Jan, 2026 | 10:09 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசியினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட போட்டி அட்டவணை பிரகாரம் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மறுத்ததை அடுத்து பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து விளையாடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந்தியாவில் பங்களாதேஷ் அணிக்கு எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட அல்லது நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத நிலையில் அதன் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் திட்டமிடப்பட்ட போட்டிகளை நடத்துவது தொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எழுப்பிய கரிசனைகளை தீவிரமாக ஆராய்ந்து நிவர்த்தி செய்ய ஐசிசி எடுத்த விரிவான செயல்முறைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் மூன்று வாரங்களுக்கு மேலாக வீடியோ மாநாடு மற்றும் நேரடியான சந்திப்புகள் உட்பட வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் பல சுற்று உரையாடல்களில் ஐசிசி ஈடுபட்டிருந்தது.

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டிய கரிசனைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை மதிப்பாய்வு செய்தது. உள் மற்றும் வெளிப்புற நிபுணர்களிடமிருந்து சுயாதீனமான பாதுகாப்பு மதிப்பீடுகளை நடத்தி அவற்றை ஐசிசி பரிசீலித்தது. மேலும் மத்திய மற்றும் மாநில ஏற்பாடுகளை உள்ளடக்கிய விரிவான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திட்டங்களையும் நிகழ்விற்கான மேம்படுத்தப்பட்ட மற்றும் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளையும் பகிர்ந்து கொண்டது. ஐசிசி வர்த்தக கூட்டுத்தாபனத்துடனான கலந்துரையாடலின் போது உட்பட இந்த உத்தரவாதங்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

பங்களாதேஷின் தேசிய அணி, அதிகாரிகள் அல்லது இந்தியாவில் உள்ள அதன்  ஆதரவாளர்களுக்கு நம்பகமான அல்லது உறுதிப்படுத்தக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று ஐசிசியின் மதிப்பீடுகள் முடிவு செய்தது.

இதனை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது முடிவை மாற்ற கடந்த புதன்கிழமைவரை  ஐசிசி  காலக்கெடு  விதித்திருந்தது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து,  திட்டமிட்டபடி போட்டியில் பங்களாதேஷ் பங்கேற்குமா என்பதை 24 மணி நேர காலக்கெடுவிற்குள் உறுதிப்படுத்துமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் ஐசிசி கோரிக்கை விடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்காததால், மாற்று அணியை அடையாளம் காண ஐ.சி.சி அதன் நிறுவப்பட்ட நிர்வாகம் மற்றும் தகுதிச் செயல்முறைகளில் ஈடுபட்டது.

ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முதலில் தகுதி பெறத் தவறிய ஸ்காட்லாந்து தரவரிசையில் 14ஆவது இடத்தில் இருக்கிறது. ஏற்கனவே ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற தகுதிபெற்ற நமீபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஓமான் மற்றும் இத்தாலி ஆகிய அணிகளைவிட தரவரிசையில் ஸ்கொட்லாந்து முன்னிலையில்  இருக்கிறது. இதனை அடுத்த பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்தை ரி20 உலகக் கிண்ணத்தில் இணைத்துக்கொள்ள ஐசிசி முடிவு செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45