கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணா்கள் விடுதி என்பன இன்று  வட மாகாண முதலமைச்சர் மற்றும்  வட மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 9 மில்லியன் ரூபா  குறித்தொதுக்கப்பட்ட நிதியில்  அமைக்கப்பட்ட மனநல மருத்துவ பிரிவு கட்டிடத் தொகுதியும் 20 மில்லியன் ரூபாவில்  அமைக்கப்பட்ட வைத்திய நிபுணர்கள் விடுதியும் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின்  சேவையினை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  தற்போது மேற்படி கட்டிடத் தொகுதிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் வடக்கு முதலமைச்சருடன் சுகாதார அமைச்சர் குணசீலன், முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன், மாகாண சபை உறுப்பினா் அரியரத்தினம் தவநாதன், மாகாண சுகாதாரப் பணிப்பாளா் கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய மைதிலி  உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.