(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் 14 கழகங்களுக்கு இடையில் இரண்டு குழுக்களில் நடத்தப்பட்டவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் சுப்பர் 8 சுற்றுக்கு யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் முன்னேறுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் போட்டி சனிக்கிழமை (24) நடைபெறவுள்ளது.
பி குழுவில் தோல்வி அடையாமல் இருக்கும் பெலிக்கன்ஸ் கழகத்தை இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பி குழுவுக்கான தீர்மானம் மிக்க போட்டியில் சென். மேரிஸ் கழகம் எதிர்த்தாடவுள்ளது.
சுப்பர் 8 சுற்றுக்கு செல்ல சென். மேரிஸ் கழகத்திற்கு வெற்றிதோல்வியற்ற முடிவே தேவை.
ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற பொலிஸ் கழகத்திற்கு எதிரான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டாலே போதும் என்ற நோக்கத்தில் களம் இறங்கிய சென் மேரிஸ் கழகம் தோல்வி அடைந்ததால் பெரும் ஏமாற்றம் அடைந்தது.
மேலும் அப் போட்டியில் ஏகப்பட்ட கோல்களை சென் மேரிஸ் கழகத்தின் வெளிநாட்டு வீரர்கள் தவறவிட்டு இரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தனர்.
எனவே, சென் மேரிஸ் கழகம் தனது முந்தைய தவறுகளைத் திருத்திக்கொண்டு ஆரம்பம் முதல் கடைசிவரை வெற்றியை மாத்திரம் குறிவைத்து விளையாடுவது அவசியமாகும்.
சென் மேரிஸ் கழகத்திற்கு முன்னாள் தேசிய வீரர் மரியதாஸ் நிதர்ஷன் தலைவராகவும் பெலிக்கன்ஸ் கழகத்திற்கு சஞ்சய திரிமான்ன தலைவராகவும் விளையாடுகின்றனர்.
இதேவேளை, ஏ குழுவில் அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கும் சோண்டர்ஸ் கழகத்தை செரெண்டிப் கழகம் எதிர்த்தாடவுள்ளது.
இந்த இரண்டு கழகங்களும் கிட்டத்தட்ட சமபலம் கொண்டவை என்பதால் இந்தப் போட்டி பரபரப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Saunders S C

Serendib S C

Pelicans












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM