பஸ் சாரதிகளுக்கு அதிரடி சோதனை: போதைப்பொருள் பாவனை செய்த 10 பேர் சிக்கினர்!

24 Jan, 2026 | 11:55 AM
image

கடந்த ஜனவரி 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 56 பஸ் சாரதிகளில் 10 பேர்  போதைப்பொருள் பாவனை செய்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை பஸ்தியன் மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது  பல பஸ் சாரதிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது பஸ் சாரதிகளிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளின் சோதனையில், ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பாவனை செய்யும் 10 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனை உறுதி செய்யப்பட்ட பஸ் சாரதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது மிகவும் பாரதூரமான மற்றும் சிக்கலான நிலைமை என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன  தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்க பஸ் உரிமையாளர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32