கல்லடி பாலத்தில் இருந்து குதித்து யுவதி உயிர்மாய்ப்பு; மட்டக்களப்பில் அதிகரிக்கும் உயிர்மாய்ப்பு சம்பவங்கள்!

24 Jan, 2026 | 10:20 AM
image

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் குதித்து உயிரைமாய்த்துக்கொள்ள முயன்ற 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரைமாய்த்துக்கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது.

தாழங்குடா வைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரைமாய்த்துக்கொண்டுள்ளார். 

இந்த யுவதி உயிரைமாய்த்துக்கொள்வதற்காக  நேற்று இரவு 7.15 மணியளவில் கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் குதித்துள்ளார். 

இதன்போது மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர் இதனை கண்டதையடுத்து அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் யுவதியின் சடலம் வாவியில் இருந்து கரைக்கு எடுத்துவரப்பட்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த வருடம் உயர்தர பரீட்சை  தோற்றியவர் எனவும் காதல் விவகாரத்தால் இவ்வாறு உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த யுவதியின் உயிர்மாய்ப்பை அடுத்து இந்த வருடம் ஜனவரி  மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 23 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இளம் யுவதிகள் 75 வயதுடைய 3 முதியோர் வரை 16 பேர் உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்து. மாவட்டத்தில் தொடர்ச்சியாக உயிர்மாய்ப்பு சம்பவங்கள்  இடம்பெற்று வருவதையடுத்து பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17