கொஹுவலை கொலை சம்பவம் ; பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி கைது!

24 Jan, 2026 | 10:20 AM
image

கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதியில் 2025.12.30 அன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் வெள்ளிக்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதிக்கு 2025.12.30 அன்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர்  வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டவர் சிறுமி அல்ல சிறுமியின் தாய் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில்  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி தெஹிவளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெஹிவளை பகுதியில் உள்ள பழைய வீடொன்றில் இருந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு பாதாள உலக கும்பல் தலைவரின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்...

2026-02-14 11:24:17
news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55
news-image

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில்...

2026-02-14 09:39:58
news-image

தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2026-02-14 09:15:43
news-image

'இந்தியா - AI உச்சி மாநாடு...

2026-02-14 08:59:50