மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

24 Jan, 2026 | 11:42 AM
image

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராவல - கேகாலை வீதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வராவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், மற்றுமொருவரும் காயமடைந்து ருவன்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுரலிய - களுகல வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுகல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் பதுரலிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்...

2026-02-14 11:24:17
news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55
news-image

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில்...

2026-02-14 09:39:58
news-image

தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2026-02-14 09:15:43
news-image

'இந்தியா - AI உச்சி மாநாடு...

2026-02-14 08:59:50