துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள் வத்தளையில் கைது!

Published By: Digital Desk 1

24 Jan, 2026 | 09:53 AM
image

ராகமை பகுதியில் கடந்த 2025.12.23ஆம் திகதி அன்று ரி-56 துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்ற ஒருவரும், அவருக்கு உதவிய சந்தேக நபரும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் சில நாட்களுக்கு முன்பு விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (23) காலை குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வத்தளை - ஒலியமுல்ல பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களிடமிருந்து 20 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மீகொடை பகுதியைச் சேர்ந்த, 52 மற்றும் 54 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (24) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை பாடசாலைகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள்...

2026-02-14 13:30:06
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்...

2026-02-14 13:15:11
news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55
news-image

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில்...

2026-02-14 09:39:58
news-image

தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2026-02-14 09:15:43