உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள் பறிபோனது: மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் குற்றச்சாட்டு

Published By: Vishnu

24 Jan, 2026 | 03:49 AM
image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றலய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,

உயரப்புலம் வீதியானது நீண்ட காலமாக புனரமைக்காத நிலையில் காணப்படுகிறது. அந்த வீதியால் நோயாளர் காவு வண்டிகள் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

குறித்த வீதியால் நோயாளர் காவு வண்டி வரமுடியாததால் இதுவரை நான்கு உயிர்கள் பலியாகி உள்ளன. இன்னமும் எத்தனை உயிர்கள் பறிபோன பின்னர் அந்த வீதியை புனரமைப்பீர்கள்? எனவே விரைவாக அந்த வீதியை புனரமையுங்கள் என்றார்.

இது குறித்து தவிசாளர் ஜெசீதன் கருத்து தெரிவிக்கையில்,

வீதிகள் புனரமைப்புக்கு வரையறுக்கப்பட்ட நிதியை எமக்கு கிடைக்கிறது. இயன்ற அளவு நாங்கள் வீதி அபிவிருத்திகளை செய்கின்றோம். பிரச்சினைகளுக்குரிய வீதிகள் தொடர்பான விபரங்களை வழங்குங்கள், விசேட நிதிகள் ஏதாவது கிடைக்கும் பட்சத்தில் அவற்றை நாங்கள் புனரமைப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21