மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் - க. இளங்குமரன் உறுதி

Published By: Vishnu

24 Jan, 2026 | 03:44 AM
image

மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழில். 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மாகாண சபை தேர்தல் சட்ட மூலம் இன்னும் இயற்றப்படவில்லை. அதனை மிக விரைவில் இயற்றி தேர்தலை நடாத்துவதற்கே இருக்கிறோம். 

எந்தவொரு தேர்தலையும் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிற்போட மாட்டாது.

எம்மால் சட்ட மூலங்களை மிக எளிதாக நிறைவேற்றமுடியும். நாடாளுமன்றில் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம். அதற்காக சர்வாதிகாரமாக நடந்து கொள்ள மாட்டோம். ஜனநாயக முறைப்படியே நடந்து கொள்வோம். மக்களின் கருத்துக்களை கேட்டே மாகாண சபை சட்டம் இயற்றப்படும் 

ஜெ. ஆர் செய்தது போல நாடாளுமன்றில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக தான்தோன்றி தனமாக சட்டங்களை இயற்ற மாட்டோம். மக்களின் கருத்துக்களை கேட்டு , மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட மூலங்களையே நாடாளுமன்றில் நிறைவேற்றுவோம் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

தலைமன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஷாம்பூ...

2026-07-14 12:12:37
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54