அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்களாக மூவர் நியமனம் - சபாநாயகர் அனுமதி

Published By: Vishnu

23 Jan, 2026 | 09:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் உறுப்பினர்களாக ஒஸ்டின் பிரனாந்து, வசந்தா செனவிரத்ன, ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிக்க பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும் பொது இணக்கப்பாட்டுடன் முன்வைத்த பிரேரணைக்கு சபாநாயகர் அனுமதியளித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது சபைக்கு விசேட அறிவிப்பை முன்வைத்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரசியலமைப்பின்  61 (1) இ, பிரிவின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின்   மூன்று சிவில் பிரஜைகளின்  பதவி காலம் 2026.01.19 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன்,சபாநாயகரின் பெயர் முன்மொழிவுடன் ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு  சிவில்  பிரதிநிதிகள் மூவர் நியமிக்கப்படுவர்.

பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கலுபகே ஒஸ்டின் பிரனாந்து, கலாநிதி வசந்தா செனவிரத்ன மற்றும் உடுநுவர கம்பதிகே ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரின் நியமனம் சபைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது என்றார்.

இதன்போது சபையின் அனுமதியை  பிரதமர் கோரியிருந்த நிலையில் சபாநாயகர் அதற்கு அனுமதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21