டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணம்

Published By: Vishnu

23 Jan, 2026 | 08:19 PM
image

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இலங்கை ரசிகர்களை மேலும் உற்சாகம் அடையச் செய்யும் வகையில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தலைமையகத்தில் ரி20 உலகக் கிண்ணம் இன்று காட்சிப்படுத்தப்பட்டது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இந்த மைல்கல் நிகழ்வை முன்னின்று நடத்தியதன் மூலம் இலங்கையில் உலகக் கிண்ண கொண்டாட்டத்திற்கு புதிய உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

உலகக் கிண்ணத்தின் வருகையானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதுடன் தேசிய விளையாட்டுத்துறையுடன் டயலொக் கொண்டுள்ள பிரிக்கமுடியாத பிணைப்பை மீண்டும் உலகுக்கு பறைசாற்றுவதாக அமைகிறது.

இலங்கை மற்றும் இந்தியா கூட்டாக நடத்தும் 2026 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடர், எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதியிலிருந்து மார்ச் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் ரி20 உலகக் கிண்ணப் போட்டி  14 வருடங்களுக்கு பின்னர்  நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கிண்ணம் இரண்டு நாடுகளிலும் அமைந்துள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. சுமார் ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா, அதிரடி ஆட்டங்களும் பரபரப்பான தருணங்களும் நிறைந்த ஒரு புதிய உற்சாகத்தை ரசிகர்களுக்கு அளிக்கவுள்ளது.

2007இல் அறிமுகப்படுத்தப்பட்ட உலகக் கிண்ணமானது, கிரிக்கெட் விளையாட்டின் வேகம், நவீனத்துவம் மற்றும் உலகளாவிய ஈர்ப்பை பிரதிபலிக்கும் முக்கிய சின்னமாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த விறுவிறுப்பான விளையாட்டு வடிவத்தின் பரிணாம வளர்ச்சியையும் அதன் பிரபலத்தையும் உலகக் கிண்ணம் பிரதிபலிக்கிறது. 

டயலொக் தலைமையகத்தில் உலகக் கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள இலட்சக் கணக்கான ரசிகர்களிடம் கிரிக்கெட்டின் உற்சாகத்தை கொண்டு சேர்ப்பதில் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அது வகிக்கும் முக்கிய பங்கையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நீண்டகாலப் பங்காளராக விளங்கும் டயலொக்கிற்கு, ரி20 உலகக் கிண்ணத்தின் வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நேரடி ஒளிபரப்புகள், விருத்தி அடைந்த டிஜிட்டல் தளங்கள் மற்றும் பல்வேறு களச் செயற்பாடுகள் மூலம், ரசிகர்கள் கிரிக்கெட்டை அனுபவிக்கும் முறையை டயலொக் புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 

இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டை எப்போதும் எளிதாகவும் இடையறாத வகையிலும் அணுகக்கூடியதாக மாற்றி, விளையாட்டுடன் அவர்களுடைய தொடர்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பல ஆண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2026 ஐசிசி ரி20 ஆடவர் உலகக் கிண்ணப் போட்டியின் இலங்கைக்கான பிரத்தியேக ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமைகளை டயலொக் பெற்றுள்ளது. பரபரப்பையும் விறுவிறுப்பையும் தரக்கூடிய இந்தப் போட்டிகளை Dialog Television மற்றும் Dialog Play App ஊடாக ரசிகர்கள் தங்களது இல்லங்களிலிருந்தே நேரடியாக கண்டுகளிக்க முடியும். மேலும், Supreme TV உடனான இலவச ஒளிபரப்பு (Free-to-Air) பங்காளித்துவத்தின்  மூலம், இந்தத் தொடர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களையும் சென்றடையவுள்ளது.

டயலொக் தலைமையகத்திலிருந்து புறப்படும் உலகக் கிண்ணம், கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.  

இந்த சுற்றுப்பயணம் ரசிகர்களுக்கு உலகக் கிண்ணத்தை மிக அருகில் இருந்து தெளிவாக பார்ப்பதற்கும் அந்த நினைவுகளைப் படம்பிடித்துக் கொள்வதற்கும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

2026 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடர் நெருங்கி வரும் வேளையில், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் எல்லையற்ற ஆர்வத்தோடு இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவைக் கொண்டாட முழு இலங்கையும் காத்துக் கொண்டிருக்கிறது.

டயலொக் தலைமையகத்தில் ரி20 உலகக் கிண்ணத்துடன் எடுத்துக்கொண்ட படத்தில் யமித் அனுராத (உற்பத்தி முகாமையாளர் – விளம்பர ஊடகம் மற்றும் உள்ளகம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), புபுது அளுத்கெதர (வணிக தலைமை அதிகாரி – ஊடகம் மற்றும் உள்ளகம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), லசன்த தெவரப்பெரும (குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), சுப்புன் வீரசிங்க (குழும பிரதம நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி), உப்புல் நவரத்ன பண்டார (சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி;, ஸ்ரீலங்கா கிரிக்கெட்), ஹர்ஷ சமரநாயக்க (துணைத் தலைவர் – குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி) ஆகியோர் காணப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45