(நெவில் அன்தனி)
விண்ட்ஹோக் நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 58 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை, 9 விக்கெட்களால் பெருந்தோல்வி அடைந்தது.
எவ்வாறாயினும், இக் குழுவில் ஜப்பானையும் அயர்லாந்தையும் ஏற்கனவே வெற்றிகொண்டதன் மூலம் சுப்பர் சிக்சஸ் (Super Sixes) சுற்றில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டிருந்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களுக்கு சுருண்டது.
துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல (14), கவிஜ கமகே (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் வில் பைரோம் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கேசி பார்ட்டன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சார்ள்ஸ் லெக்மண்ட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

59 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஸ்டீவன் ஹொக் 28 ஓட்டங்களுடனும் இலங்கை வம்சாவளி நிட்டேஷ் செமுவல் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஜப்பானுக்கு எதிராக சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டிய இலங்கை, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 38 வருட வரலாற்றில் 100 ஓட்டங்களுக்குள் சுருண்டது இதுவே முதல் தடவையாகும்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பாமேரா ஓவல் மைதானத்தில் 1988இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற 101 ஓட்டங்களே அதன் முந்தைய மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாக இருந்தது.
ஆட்டநாயகன்: வில் பைரோம்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM