சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

23 Jan, 2026 | 04:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சட்டமா அதிபரினதும், சட்டமா அதிபர் திணைக்களத்தினதும்  சுயாதீனத்தை நாங்கள் பாதுகாப்போம். இருப்பினும் சட்டவிரோதமான முறையில் எவரும் செயற்பட்டால் பாரபட்சமில்லாமல் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம். எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) டைபெற்ற அமர்வின் போது  சட்டமா அதிபர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,

சட்டமா அதிபரினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சுயாதீனத்துக்கு தனித்து  முன்னிலையாகவில்லை. 159 உறுப்பினர்கள் உட்பட ஜனாதிபதி என்ற அடிப்படையில் அரசாங்கமாக முன்னிலையாகியுள்ளோம். சட்டமா அதிபர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விடயங்கள் மற்றும் கருத்துக்கள் பரிமாற்றப்படுகின்றன. அனைத்துக்கும் பதிலளிக்க  போவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை கவனத்திற் கொள்ள வேண்டாம். சமூக வலைத்தளங்கள் எனக்கு பதவி வழங்கவில்லை. ஜனாதிபதி தான் என்னை நியமித்துள்ளார். எனது அரசாங்கம்  மற்றும் ஜனாதிபதி தொடர்பில் முழுமையான நம்பிக்கை உள்ளது.

சட்டமா அதிபரினதும், சட்டமா அதிபர் திணைக்களத்தினதும்  சுயாதீனத்தை நாங்கள் பாதுகாப்போம். இருப்பினும் சட்டவிரோதமான முறையில் எவரும் செயற்பட்டால் பாரபட்சமில்லாமல் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம். எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு...

2026-07-15 04:08:39
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09