ஜாக்கி - திரைப்பட விமர்சனம்

23 Jan, 2026 | 04:03 PM
image

ஜாக்கி - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : PK 7 ஸ்டுடியோஸ் LLP.

நடிகர்கள்: யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர்.

இயக்கம் : டொக்டர். பிரபகல்

மதிப்பீடு: 2.5 /‌5

தமிழகத்தின் தென் பகுதியில் நடைபெற்று வரும் ஆட்டு கிடா சண்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் 'ஜாக்கி ' எனும் இந்த திரைப்படம் - அது தொடர்பான வீர வரலாற்றையும் , கலாச்சாரத்தையும் துல்லியமாக பதிவு செய்துள்ளதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். 

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கிடா சண்டைக்கென தனியாக கூட்டமைப்பு ஒன்றை நடத்தி வரும் வாஸ்தாவி ( மதுசூதன் ராவ்) நெருங்கிய என்பவரின் உறவினரான கார்த்தி ( ரிதன் கிருஷ்ணாஸ்) கிடா சண்டையில் தொடர்ந்து வெற்றி பெற்று, அந்த விளையாட்டின் இறுதியில் வழங்கப்படும் ஜாக்கி எனப்படும் கௌரவமான விருதை பெற்று வருகிறார்.

ஒருமுறை கிடா சண்டையின் போது மூவுருளி வாடகை வாகனத்தின் சாரதியான ராமர் ( யுவன் கிருஷ்ணா) என்பவர் வளர்க்கும் காளி எனும் கிடாவும், கார்த்தி வளர்க்கும் கிடாவும் மோதுகிறது. இதில் ராமர் வளர்க்கும் காளி எனும் கிடா வெற்றி பெறுவதுடன்.. நிகழ்ச்சியின் இறுதியில் வழங்கப்படும் கௌரவ விருதான ஜாக்கியையும் வெல்கிறார். இதனால் ராமரை விட சாதியிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவரான கார்த்தி.. ராமரை அவமானப்படுத்த திட்டமிடுகிறார். அவருடைய திட்டம் பலித்ததா? இல்லையா ? என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத கிடா சண்டையை.. படக்குழுவினர் நேர்த்தியாக அமைத்து அந்த வீர விளையாட்டினை ரசிகர்களுக்கு அற்புதமான திரை மொழியாக வழங்கி இருக்கிறார்கள். 

தமிழர்கள் தங்களின் வீரத்தை பறைசாற்றுவதற்கான செல்லப்பிராணிகளை ( தங்களுடைய விருப்பத்திற்குரிய ஜல்லிக்கட்டு காளை - ஆட்டு கிடா - சேவல் - புறா..) உடன்பிறப்பாக கருதி வளர்ப்பதை கதாபாத்திரத்தின் இயல்பான உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார்கள்.

கார்த்தி- ராமர் இருவருக்கும் இடையேயான ஈகோ மோதல் - கார்த்தி உடன் இருப்பவர்கள் செய்யும் சதி வேலை - கிடா சண்டையின் நுட்பங்கள்- என திரைக்கதையில் பல யூகிக்க முடியாத காட்சிகளை இடம்பெறச் செய்து ரசிகர்களை கவர்ந்திருகிறார்கள். ஆனால் ராமர் மற்றும் மீனாட்சி இடையேயான காதல் காட்சிகளும், பாடல்களும் ரசிகர்களுக்கு சோர்வை உண்டாக்குகிறது.

மூன்றாண்டுகளாக கடுமையாக உழைத்து இப்படைப்பை உருவாக்கி இருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினாலும்.. வழக்கமான தமிழ் சினிமாவின் வணிக அம்சங்கள் தூக்கலாக இடம் பிடித்திருப்பதால்...!?

ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் யுவன் கிருஷ்ணா, கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிதன் கிருஷ்ணாஸ் ஆகிய இருவரும் இயக்குநர் சொன்னதை செய்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்கள். உடல் மொழி- வசன உச்சரிப்பு - உணர்வுபூர்வமான பாவனை - இவற்றில் துல்லியமான பிரதிபலிப்பு இல்லாததால்.. இருவரும் இயல்பாக கடந்து செல்கிறார்கள்.

மீனாட்சி கதாபாத்திரத்தில் திரையில் தோன்றும் அம்மு அபிராமி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார்.  இவரது கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை.

ஒத்த முத்து எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சித்தன் மோகன் குண சித்திர நடிப்பில் ரசிகர்களை எளிதாக கவர்கிறார். 

என். எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவில் கிடா சண்டை தொடர்பான காட்சிகளில் பிரம்மாண்டத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்க ... சாதாரண ட்ரோன் காட்சியின் மூலமாகவே அதை காட்சிப்படுத்தி இருக்கிறார்.‌ 

படத்தொகுப்பில் இன்னும் கூர்மையை காண்பித்திருந்தால்.. ரசிகர்களுக்கு உற்சாகம் கிடைத்திருக்கும்.

உள்ளூர் பிரமுகர்கள் - காவல்துறையினர்- கிடா வளர்ப்போர்கள் -  கிடா சண்டை ஆர்வலர்கள் -  இதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆகியவற்றை விவரித்து இருக்கும் விதமும் நன்றாக உள்ளது.  இருப்பினும் ஒரு ஆவண படத்தை பார்ப்பது போன்ற உணர்வே அதிகம் மேலிடுகிறது.

ஜாக்கி -  மதுரை மல்லி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 17:04:25
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 16:47:54
news-image

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'சிக்மா'...

2026-08-13 16:33:18
news-image

"வேலை இல்லை என்பதால்தான் பிக் பொஸ்...

2026-08-13 11:19:55
news-image

67 ஆண்டுகள் சினிமா பயணம்… உலக...

2026-08-13 11:28:39