ஹாட் ஸ்பாட் 2 மச் - திரைப்பட விமர்சனம்

23 Jan, 2026 | 03:42 PM
image

ஹாட் ஸ்பாட் 2 மச் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : கே ஜே பி டாக்கீஸ்

நடிகர்கள் : தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், ப்ரியா பவானி சங்கர், பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ , 'ஆதித்யா' கதிர் மற்றும் பலர்.

இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்

மதிப்பீடு : 2.5/5

'ஹாட்ஸ்பாட் 'படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதால் அப்படத்தின் இரண்டாம் பாகமான 'ஹாட்ஸ்பாட் 2 மச்' தயாராகி, வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல் இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தொடர்ந்து காண்போம்.

'ஹாட்ஸ்பாட் 'படத்தின் முதல் பாகத்தில் நான்கு கதைகள்-  நான்கு அத்தியாயங்கள்-  இடம்பெற்றது. இந்த இரண்டாம் பாகத்தில் மூன்று அத்தியாயங்கள் - மூன்று கதைகள் இடம்பெற்றிருக்கிறது.

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஷில்பா ( பிரியா பவானி சங்கர்) எனும் திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளரை சந்தித்து மூன்று கதைகளை சொல்கிறார்.

முதல் கதை- பிரபலமான இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்களின் தீவிர ரசிகர்கள் இருவரை பற்றிய கதை.

உயர்கல்வி கற்று வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று  நாகரீக மோகத்தில் குறிப்பாக உடை கலாச்சாரம் தொடர்பான விடயத்தில் சுதந்திர சிந்தனை கொண்ட ஷர்னிதா ( சஞ்சனா திவாரி) எனும் மகளுக்கும்- கண்ணியமாகவும், கௌரவமாகவும், சபை நாகரீகம் தெரிந்தவருமான தந்தை பாஸ்கரு( தம்பி ராமையா) க்கும் இடையேயான புரிதல் தொடர்பான தலைமுறை இடைவெளியை பற்றிய கதை.

2025 ஆம் ஆண்டு சேர்ந்த இளைஞன் யூகன் ( அஸ்வின் குமார்)  என்பவருக்கும்  2050 ஆம் ஆண்டில் வாழும் நித்யா எனும்  யுவதி ஒருவருக்கும் இடையேயான ஆல்டர்நேட்டிவ் வேர்ல்ட் தொடர்பான ஃபேண்டஸி காதல் கதை.

பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் அல்லது யூகிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெறக் கூடாது என்பதனை மட்டும் தெளிவாக மனதில் நிறுத்திக் கொண்டு படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இது சில இடங்களில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. சில இடங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது.

மூத்த நடிகர்களான எம். எஸ். பாஸ்கர் மற்றும் தம்பி ராமையா ஆகிய இருவரும் அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்தை தன்மையை உணர்ந்து, அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார்கள்.

தன்பாலினஈர்ப்பாளர் தொடர்பான விடயங்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ச்சியாக இடம் அளித்து வரும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு பாலின சிறுபான்மையோர் நன்றி தெரிவிக்கிறார்கள்.

ஷில்பா எனும் திரைப்பட இயக்குநராக திரையில் தோன்றும் நடிகை பிரியா பவானி சங்கர் குறைந்த காட்சிகளில் மட்டும் வந்தாலும் ரசிகர்களை கவர்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான தாதா மற்றும் ராசா ஆகிய நடிகர்களின் ( இரண்டு நட்சத்திரங்களுக்கான உரையாடல் குறியீடு செம ரசனை) ரசிகர்களாக ஜேம்ஸ் மற்றும் சத்யா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர் மற்றும் ரக்சன் இருவரும் இயக்குநர் சொன்னதை செய்து பாராட்டை பெறுகிறார்கள்.

யூகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஸ்வின் குமாரும், நித்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ யும் தங்களது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.

பல இடங்களில் வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

அனைத்தும் இருந்தாலும்...ஆந்தாலஜி ஜேனரிலான படைப்பாக இருந்தாலும்... முதல் பாகத்தில் இருந்த சம்திங் சம்திங் இரண்டாம் பாகத்தில் மிஸ்ஸிங்.

ஹாட் ஸ்பாட் 2 மச் -  சாஃப்ட் ஸ்பாட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20