முக்கிய துறைகள் அரசியலாக்கம்: கல்வி மறுசீரமைப்பில் ஒத்துழைப்பு – காவிந்த ஜயவர்தன

23 Jan, 2026 | 03:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் கல்வித்துறை, நீதித்துறை மற்றும் பொலிஸ்துறை ஆகிய முக்கியமான துறைகளை அரசியலாக்கியுள்ளது.புதிய கல்வி மறுசீரமைப்பை சிறந்த முறையில் கொண்டு வந்தால் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். கல்வித் திட்டம் நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என  ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23)  நடைபெற்ற  பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டுக்கு பொருந்தும் வகையில்  கல்வி மறுசீரமைப்பை கொண்டுவருவதற்காகவே மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள். ஆனால் அரசாங்கத்தால் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு மக்களாணைக்கு விரோதமானது. பல சர்ச்சைக்குரிய  விடயங்கள் புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக  சட்டத்தை திருத்தம் செய்து,பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையாக அரசியல்மயப்படுத்த  அரசாங்கம் முயற்சிக்கிறது.கல்வி, பொலிஸ், மற்றும்  நீதி ஆகிய துறைகள் இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன. இது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.

புதிய கல்வி மறுசீரமைப்பை சிறந்த முறையில் கொண்டு வந்தால் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். கல்வித் திட்டம் நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32