ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம், 58 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

23 Jan, 2026 | 02:58 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்னர் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டிய இலங்கை, உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக 100 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்களையும் இழந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விண்ட்ஹொக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஏ குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த 58 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்தப் போட்டியில் சாமிக்க ஹீனட்டிகல (14), கவிஜ கமகே (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் வில் பைரோம் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதற்கு முன்னர்  19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை இளையோர் அணி பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை 101 ஓட்டங்களாகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பாமேரா ஓவல் மைதானத்தில் 1988இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45