தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் - ஜாவா லேன் போட்டி இன்று

23 Jan, 2026 | 05:21 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 14 கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் சுற்றுப் போட்டிகள் இந்த வாரத்துடன் நிறைவுபெறவுள்ளன.

ஏழாவதும் கடைசியுமான கட்டத்தின ஆறு போட்டிகள் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்றிலிருந்து அடுத்து மூன்று தினங்களுக்கு நடைபெறும்.

இன்று நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளில் ஏ குழுவில் இடம்பெறும் நடப்பு உப சம்பியன் ஜாவா லேன் கழகத்திற்கும் நியூ ஸ்டார் கழகத்திற்கும் இடையிலான போட்டி பிரதான இடத்தை வகிக்கிறது.

இப் போட்டி இன்று இரவு 8.30  மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இக் குழுவிலிருந்து சோண்டர்ஸ் கழகம் (13 புள்ளிகள்), நியூ ஸ்டார் கழகம் (12 புள்ளிகள்), செரெண்டிப்  கழகம் (12 புள்ளிகள்) ஆகியன ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ள நிலையில் கடைசி அணியாக ஜாவா லேன் கழகம் தகுதிபெறுமா இல்லையா என்பது இன்றைய போட்டி முடிவில் தெரியவரும்.

இந்தப் போட்டியில் ஜாவா லேன் கழகம் வெற்றிபெற்றால் அல்லது போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் சுப்பர் 8இல் பங்குபற்ற 7ஆவது அணியாக தகுதிபெறும்.

இப்போதைக்கு ஜாவா லேனின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

ஆனால், ஜாவா லேன கழகத்துக்கும் கிறிஸ்டல் பெலஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளதால் இந்த இரண்டு கழகங்கள் சம்பந்தப்பட்ட போட்டி முடிவுகளிலேயே எந்த அணி சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதபெறும் என்பது உறுதிசெய்யப்படும்.

ஒருவேளை இன்றைய போட்டியில் ஜாவா லேன் பாரிய தோல்வியைத் தழுவி கிறிஸ்டல் பெலஸ் தனது போட்டியில் சாதனைமிகு பெரிய வெற்றியை ஈட்டினால் நிகர கொல்கள் வித்தியாச அடிப்படையிலேயே எந்த அணி சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் என்பது தீர்மானிக்கப்படும்.

எவ்வாறாயினும் ஜாவா லேன் பாரிய தோல்வியைத் தழுவும் என்பது சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல.

கிறிஸ்டல் பெலஸ் தனது கடைசிப் போட்டியில் நிகம்போ யூத் கழகத்தை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் எதிர்த்தாடவுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் பிற்பகல் நடைபெறவுள்ள இதே குழுவுக்கான போட்டியில் மொரகஸ்முல்லை கழகத்தை நடப்பு சம்பியன் மாத்தறை சிட்டி எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரண்டு கழகங்களும் அணிகள் நிலையில் முறையே 7, 8ஆம் இடங்களில் இருப்பதுடன் தரமிறக்கல் சுற்றில் விளையாடவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10