ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக் கிண்ணம்: ஏ குழுவில் தோல்வி அடையாமல் இருக்கும் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன

Published By: Digital Desk 3

23 Jan, 2026 | 12:52 PM
image

(ஐசிசி ஊடக அறிக்கை)

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏ குழுவில் முதலாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் தோல்வி அடையாமல் இருக்கும் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் இன்று விளையாடவுள்ளன.

தலா 2 வெற்றிகளுடன் ஏற்கனவே சுப்ப சிக்ஸஸ் சுற்றுக்கு தெரிவாகியுள்ள இந்த இரண்டு அணிகளில் இலங்கை மிகச் சிறந்த நிகர ஓட்ட (3.090) வித்தியாசத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. அவுஸ்திரேலியா 2ஆம் இடத்தில் (2.047) இருக்கிறது.

இந்நிலையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் இலங்கை இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் தமது குழுவில் பலம் குன்றிய ஜப்பானையும் அயர்லாந்தையும் மிக இலகுவாக வெற்றிகொண்டிருந்தன. ஆனால் இன்றைய போட்டியிலேயே ஏ குழுவில் யார் பலசாலி என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 38 வருட வராலாற்றில் ஒரு இன்னிங்ஸில் தனி நபருக்கான அதிகூடிய 192 ஓட்டங்களைக் குவித்து சாதனை நிலைநாட்டிய விரான் சமுதித்த, ஆரம்ப விக்கெட்டில் திமன்த மஹாவித்தானவுடன் 328 ஓட்டங்களைப் பகிர்ந்து சகல விக்கெட்களுக்குமான இணைப்பாட்ட சாதனையையும் படைத்தார்.

இந்த இரண்டு சாதனைகளும் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் நிலைநாட்டப்பட்டன.

அவர்கள் இருவரும் முதல் தடவையாக சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளவுள்ளதால் நிதானம், பொறுமை, திறமை, சிறந்த நுட்பத்திறன் ஆகிய அனைத்தையும் ஒருங்கே பிரயோகித்து துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்பபடுத்தவேண்டும்.

அதேபோன்று ஏனைய வீரர்களும் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து கணிசமான ஓட்டங்களைப் பெறுவது அணிக்கு வரப்பிரசாதமாக அமையும்.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்த மட்டில் ஆரம்ப வீரர்களான வில் மலாஸுக், இலங்கை வம்சாவளியான நிட்டேஷ் சமுவேல் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி வருவதை அவதானிக்க முடிகிறது. அவர்களில் மலாஸுக் அதிரடியாகவும் சமுவேல் நிதானத்துடனும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் இது ஒரு மிகச் சிறந்த வியூகம் ஆகும்.

எனவே இந்த ஆரம்ப ஜோடியைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடனும் வித்தியசமான பாணிகளிலும்  (veriations)  பந்துவீசவேண்டும்.

பந்துவீச்சில் சார்ள்ஸ் லெச்மண்ட், மற்றொரு இலங்கை வம்சாவளியான நேதன் குறே ஆகிய இருவரும் முக்கிய வீரர்களாக அணியில் இடம்பெறுகின்றனர்.

நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதால் இன்றைய போட்டியில் எந்த அணி முழுமையான திறமையை வெளிப்படுத்துகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

அணிகள்

இலங்கை: திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த, துல்னித் சிகேரா, விமத் தின்சார (தலைவர்), கவிஜ கமகே, சாமிக்க ஹீனட்டிகல, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன, ரசித் நிம்சார, குகதாஸ் மாதுளன், விக்னேஸ்வரன் ஆகாஷ்.

அவுஸ்திரேலியா: வில் மலாஸுக், நிட்டேஷ்  சமுவேல், ஸ்டிவன் ஹோகன், ஒலிவர் பீக் (தலைவர்), அலெக்ஸ் லீ யங், ஜேடன் ட்ரேப்பர், ஆரியன் ஷர்மா,  ஹேடன் ஷிலர்,   கேசி பார்ட்டன்,  வில்லியம் பைரோம், சார்ள்ஸ் லெச்முண்ட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28