எங்­களைத் தண்­டிப்­ப­தற்­கா­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மனம்

Published By: Robert

28 Aug, 2017 | 09:00 AM
image

என்­னையும் எமது தரப்­பையும் தண்­டிக்­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் எவ்­வாறு செயற்­ப­டப்போ­கின்றார் என்­பது குறித்து வேடிக்கை பார்க்­கின்றோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். 

என்னை குற்­ற­வாளி  என கூறிக்­கொண்டு உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் நல்­லாட்­சிக்குள் ஒளிந்­துள்­ளனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முகத்துவாரம் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மஹா விஸ்ணு ஆல­யத்­திற்கு தரி­சனம் பெற சென்­றி­ருந்தார். வழி­பா­டு­களின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

அர­சாங்­கத்தில் இது­வரை காலம் கட­மை­யாற்­றிய நீதி அமைச்சர் மாற்­றப்­பட்டு இப்­போது புதிய நீதி அமைச்சர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இவர் எவ்­வாறு செயற்­ப­டு­கின்றார் என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும். 

ஏனெனில் என்­னையும் எனது தரப்­பையும் தண்­டிக்­கவே இவர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். எமக்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை, சட்­ட­த­ர­ணிகள் சங்­கத்தின் சுயா­தீ­னதில் தலை­யி­ட­வில்லை, நீதி மன்­றத்தை கட்­டுப்­ப­டுத்­த­வில்லை என்ற குற்­றங்­க­ளு­கா­கத்­தானே நீதி அமைச்­சரை நீக்­கி­னார்கள். 

ஆகவே இவர் புதி­தாக கட­மை­களை பொறுப்­பேற்­றுள்ள நிலையில் எவ்­வாறு செயற்­ப­டப்­போ­கின்றார் என்­பது குறித்து நாம் வேடிக்கை பார்த்து வரு­கின்றோம். இவரை நிய­மித்­துள்­ளமை எம்மை தண்­டிக்­க­வென்­பது எமக்கு தெரியும். ஆகவே அவர் எவ்­வாறு அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­போ­கின்றார் என்­பது குறித்து நாம் அவ­தா­னித்து வரு­கின்றோம். 

விஜ­ய­தாச ராஜபக்ஷவையும் பழி­வாங்­கி­விட்­டனர். அதேபோல் மேலும் பலர் பழி­வாங்­கப்­ப­டு­வார்கள். இதன் மத்­தியில் எமக்­கெ­தி­ரான செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது, எம்மை தண்­டிப்­பர்­களா இல்­லையா என்­பதை நாம் பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும். 

எம்மை குறை­கூ­று­வதை விடுத்தால் இந்த அர­சாங்கம் வேறு எதையும் இது­வரை செய்­த­தில்லை. எல்லா செயற்­பா­டு­க­ளுக்கும் எனது பெயர் இந்த அர­சாங்­கத்­திற்கு தேவைப்­ப­டு­கின்­றது. எம்­முடன் இருந்து அர­சியல் செய்­த­வர்கள் இன்று மாற்றுக் கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 

நான் எனது அர­சாங்­கத்தில் ஊழல் மோச­டி­களை செய்தேன் என்றால் எனது ஆட்­சியில் நிரந்­த­ர­மாக அமைச்சுப் பத­வி­களை வகித்­த­வர்கள் முதலில் அனைத்திற்கும் பொறுப்புக் கூறவேண்டும். இன்று நல்லாட்சியில் இருக்கும் அதிகமான நபர்களை முதலில் தண்டிக்க வேண்டும். மாறாக அவர்கள் தப்பித்துகொள்ள எனது பெயரை பயன்படுத்துவது வேடிக்கையான விடயமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00