இத்தாலிக்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டை சேர்ந்த 26 வயதான இளம்பெண் ஒருவரை அவரது காதலன் முன்னிலையில் கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மர்ம கும்பலை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்று அதிகாலை நேரத்தில் ரிமினி கடற்கரையிற்கு காதல் ஜோடி இருவரும் உலாவ சென்றிருந்த வேளையில், அங்கு வந்த 4 பேர் இருவரிடமும் பேசு கொடுத்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர், இருவரும் எதிர்பாராத நிலையில் அவர்கள் மீது நால்வரும் பாய்ந்து தாக்கியுள்ளனர்.காதலனை தாக்கியதும் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர், காதலனின் கண் முன்னால் அவரது காதலியை நால்வரும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இச்சம்பவத்திற்கு பின்னர், இருவரிடமும் இருந்து பொருட்களையும் அவர்கள் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இளம்பெண்ணை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனரா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் இதே கடற்கரையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த 17 வயதான இளம்பெண் ஒருவர் மர்ம நபரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.