பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட ஐசிசி ரி20 உலகக் கிண்ணம்

Published By: Vishnu

22 Jan, 2026 | 07:07 PM
image

இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு கொண்டுசெலப்படவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணம், ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் 22ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கொண்டுவரப்பட்டது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தக் கிண்ணம் சிறிது நேரம் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டு ஐசிசி அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்ட்டது.

விமானப்படை வீரர் ஒருவர் தனது நெஞ்சுப்பகுதியில் சுமந்தவாறு பராசூட் மூலம் இன்று பிற்பகல் விளையாட்டங்கில் கால்பதித்தார்.

அதனைத் தொடர்ந்து விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உலகக் கிண்ணத்தை அவர் பார்வைக்கு வைத்தார்.

இலங்கைக்கான  உலகக் கிண்ண சுற்றுப் பயணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஆரம்பித்துவைத்தார்.

இந்தக் கிண்ணம் கண்டி, தம்புள்ளை, யாழ்பாணம் ஆகிய இடங்களுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23
news-image

இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா...

2026-02-11 18:36:26
news-image

ஆசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் 2026...

2026-02-11 15:02:39
news-image

SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற...

2026-02-10 22:55:29
news-image

உபாதை காரணமாக ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து...

2026-02-10 22:01:05
news-image

சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக்...

2026-02-10 20:29:45