அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; மூன்று பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

22 Jan, 2026 | 03:52 PM
image

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இரண்டு பெண்களும் ஆணொருவருமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கார்கெல்லிகோ வாவி அமைந்துள்ள நகரில் இன்று வியாழக்கிழமை (22) அந்நாட்டு நேரப்படி சுமார் 4:40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் எனவும், உள்ளூர்வாசிகள் உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தலைமறைவாகியுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

இந்த சம்பவம் குடும்ப வன்முறையால் இடம்பெற்றிருக்கலாம் இருக்கலாம் என நம்பப்படுவதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உள்ளூர் கவுன்சிலுக்குச் சொந்தமான வாகனத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக செவன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸின் மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ள  கார்கெல்லிகோ வாவி நகரத்தில் சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர்.

கடந்த மாதம் சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரல்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32